விஸ்வரூபம் 2 – விரைவில்….கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி….

நடிகர் கமல்ஹாசன் நடித்து கிடப்பில் போடப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகள் மீண்டும் நடைபெறவுள்ளது.

கமல்ஹாசன் எடுத்த விஸ்வரூபம் படம் முஸ்லீம்களுக்கு எதிரானது எனக் கூறி அதை வெளியிட பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது. நீதிமன்றமும் தடை விதித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத கமல்ஹாசன், நாட்டை விட்டே வெளியேறுவேன் எனக் கூறி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின், ஒரு வழியாக அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அதனையடுத்து, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விஸ்வரூபம்-2 தயாரானது. அந்தப் படத்தையும் கமல்ஹாசனே இயக்கினார். படம் ஏறக்குறையை முடிவடையும் வேலையில் அந்த படத்தின் வேலை நிறுத்தப்பட்டது. அதன் பின் கமல்ஹாசன் பாபநாசம், தூங்காவனம், உத்த வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். எனவே, விஸ்வரூபம் 2 வெளியாகுமா? வெளியாகாதா என கமல் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் வேலைகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பை கமல்ஹாசன் முழுவதும் முடித்துவிட்டார். ஒரு வார வேலை மட்டுமே மீதம் இருக்கிறது. படத்தின் எடிட்டிங்கும் முடிவும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், அந்த வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், விஸ்வரூபம் 2 விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது..

இந்த செய்தி கமல்ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது..