பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ம் தேதி ரஜினியின் பேட்ட, மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.

இரண்டு படங்களுமே வசூலில் பெரும் மாஸ் காட்டின. உலக அளவில் பேட்ட படமும் தமிழக அளவில் விஸ்வாசம் படமும் வசூலில் சாதனை படைத்தன. இந்நிலையில் தமிழகத்தில் விஸ்வாசம் படம், பேட்ட படத்தை விட வசூலில் முந்திவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க பாஸ்-  'சர்கார்' படத்தின் அடுத்த சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியீடு!

பேமிலி செண்டிமெண்ட் மற்றும் எமோசனல் வைக்கும் காட்சிகள் காரணமாக குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படத்துக்கு வந்ததால் வசூலில் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் மெர்ச்ல் படத்தின் தமிழக வசூல் சாதனையை விஸ்வாசம் படம் முந்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.