நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு இன்று இரட்டை விருந்து என்று சொல்லும் அளவுக்கு அமைந்துள்ளது அவரது ஃபர்ஸ்ட் லுக் குறித்தான நல்ல விமர்சனங்கள்.

நடிகர் அஜித் சிவா இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படம் விஸ்வாசம். தொடர்ந்து நான்காவது படத்தை அஜித்தை வைத்து இயக்குகிறார் சிவா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியானது. அப்போதிலிருந்து அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி விஸ்வாசம் படத்தை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இந்த படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என சில யூகங்களை விட்டுச்சென்றுள்ளன. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித் இருக்கிறார். ஒன்று சல்ட் அண்ட் பெப்பர் வயதான அஜித் மற்றொன்று இளமையான அஜித். இதனால் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் அஜித் இதில் ஒரே வேடம் தான் இரண்டு தோற்றத்தில் வரலாம் என்பதற்கே கூடதல் வாய்ப்புள்ளது.

ஃபிளாஷ் பேக்கில் வரும் அஜித் இளமையாக வரலாம். முன்னதாக சிறுத்தை சிவா ஒருமுறை நேர்காணலில் வயதான கதாபாத்திரத்திலிருக்கும் தல அஜித் ஊர் தலைவர் போன்ற கதாபாத்திரம் என கூறியிருந்தார். அதே போல இந்த படத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர் தனது டுவிட்டரில், நான் அதில் இளமையாக இருக்கும் தலையுடன்தான் நடிக்கிறேன். இந்த தல பக்கா மாஸ் என கூறியுள்ளார். எனவே இது இரண்டு தோற்றம் தான், இரண்டு வேடம் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.

வயதான அஜித் வரும் காட்சிகள் மும்பை பின்னணியில் நகர்கிரது. அதற்கேற்றார் போல ஃபார்ஸ்ட் லுக்கில் வயதான அஜித்தின் பின்னாடி மும்பை நகரின் கடற்கரை சாலை போன்று இருக்கிறது. அதில் சாதாரண வாட்ச் அணிந்து வெள்ளை சட்டை, கூலிங் கிளாஸ் முருக்கு மீசையில் மாஸாக வரும் அஜித். ஃப்ளாஷ் பேக்கில் செம்ம இளமையாக கோல்டன் பிரேம் கண்ணாடி, கருமையான முடி, முருக்கு மீசை பின்னணியில் தென்னை மரம், வண்ணக்கொடிகள் கட்டப்பட்டு கிராமத்து திருவிழா போல காட்சியளிக்கிறது. இரண்டு தோற்றத்தில் அஜித் வேறு வேறு தளத்தில் நடித்திருக்கிறார்.