அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ள விவகாரம் அஜித் ரசிகர்களையும், அப்படக்குழுவினரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் என படங்களை இயக்கிய சிவா அஜித்தை வைத்து மீண்டும் எடுத்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், பேட்ட படம் ஏற்கனவே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது விஸ்வாசம் படமும் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

இது அப்படக்குழு மற்றும் அஜித் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.