தல அஜித் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படம் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படி ‘விசுவாசம்’ திரைப்படம் ஒரு திகில் படம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இது உண்மையெனில் அஜித்தின் முதல் திகில் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்தில் தொடங்கி சென்னையில் முடிவடையும் இந்த படத்தின் திரைக்கதை சிவாவின் முந்தைய படங்களின் திரைக்கதையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.