‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா-நடிகர் அஜித் கூட்டணியில் தற்போது நான்காவது முறையாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘விஸ்வாசம்’.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடனக்கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அஜித்தை கண்கலங்க வைத்துள்ளது.

‘விஸ்வாசம்’ படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷீட்டிங் நடைபெற்றபோது டான்சர் சரவணன் என்பவர் வாந்தி எடுத்து, மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனைக்கண்ட படக்குழு சரவணனை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியது. ஆனால், நேரம் செல்ல செல்ல சரவணனின் உடல்நிலை மோசமாகவே அஜித் அவரை உடனே மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, ஓஎம். சரவணன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டான்சர் சரவணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், மனமுடைந்த அஜித் மற்ற டான்சர்களுடன் மருத்துவமனையில் 3 மணி நேரத்துக்கு மேலாக இருந்தார். பின்பு அஜித், ரூ.8 இலட்சத்திற்கு செலவு செய்து, இறந்த சரவணனின் உடலை பூனேவில் இருந்து சென்னைக்கு கொண்டு வர உதவியுள்ளார்.

படப்பிடிப்பின்போது, ஏற்பட்ட துயர சம்பவத்தால் படக்குழுவினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.