தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் பட கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விசுவாசம்: அஜித்தின் முதல் திகில் படமா?

இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.  தல ரசிகர்கள் தமிழகம் முழுவதும் திரையரங்கு முன்பாக மிகப்பெரிய அளவில் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைத்து வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா தியேட்டரில் அஜீத் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்வதற்காக ஏறிய போது விஷ்வாசம் சினிமா கட்அவுட் சரிந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.