தல அஜித் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அவை அதிகாரபூர்வமாக இன்னும் ஒருசில நாட்களில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘விசுவாசம்’ திரைப்படம் அஜித் நடிக்கும் முதல் ஹாரர் திகில் திரைப்படம் என்று ஒருசில இணையதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் தற்போது மறுத்துள்ளது. விசுவாசம் திரைப்படம் பக்கா கமர்ஷியல் படம் என்றும், இது திகில் படம் இல்லை என்றும் சத்யஜோதி நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் வீரம், வேதாளம் போன்று இந்த படத்திலும் ஒரு வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாகவும், அந்த காட்சிகள்தான் படத்தின் ஹைலைட் என்றும் கூறப்படுகிறது