தமிழில் ‘வீரம், வேதாளம், விவேகம்’ படங்களுக்கு பிறகு ‘தல’ அஜித் – இயக்குநர் சிவா கூட்டணி அமைத்த 4-வது படம் ‘விஸ்வாசம்’, கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

மேலும், முக்கிய வேடங்களில் பேபி அனிகா, ஜெகபதி பாபு, யோகி பாபு, தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இதற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். தெலுங்கு வெர்ஷனை வருகிற மார்ச் 1-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.