சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  'தல 59' அஜித்துடன் இணையும் இசையமைப்பாளர் இவரா! ரசிகர்கள் உற்சாகம்

இந்நிலையில், இன்று மதியம் சரியாக 1.30 மணியளவில் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியானது. இதையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து டிவிட்டரில் #Viswasamtrailer என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  இவரைப் பார்த்தால் உடனே ஐ லவ் யூ செல்வேன் - தெறிக்க விட்ட மேகா ஆகாஷ்

டிரெய்லரை பார்க்கும் போது விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் எனத் தெரிகிறது. விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.