பேட்ட படத்திற்கு முன்பே அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகிறது என செய்தி கசிந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் வருகிற 10ம் தேதி வெளியாவதாக ஏற்கனவே செய்தி வெளியானது. எனவே, இந்த 2 படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர்.

இந்நிலையில், பேட்ட ரிலீஸாகும் ஒரு நாளுக்கு முன்பே விஸ்வாசம் வெளியாகும் என தற்போது செய்தி கசிந்துள்ளது. 9ம் தேதி இரவு காட்சியாகவோ அல்லது நள்ளிரவு 1 மணிக்கோ ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட இருக்கிறதாம். எந்தெந்த தியேட்டரில் நள்ளிரவு காட்சி என விரைவில் தகவல் வெளியாகும் எனத்தெரிகிறது.

இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஸ்வாசம் படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் முன்பதிவு டிக்கெட்டை வாங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.