சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் ரசிகா்கள் ஆவலோடு எதிா்பாா்த்த விவேகம் வௌியாகியது. இதில் காஜல் அகா்வால், அக்ஷராசன், கருணாகரன், விவேக் ஓபராய் நடித்துள்ள் இந்த படமானது 3250 திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. தமிழகத்தில் 770 திரையரங்குகளில் வெளியாகி ரசிகா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்தது.

அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமென்ட் அன்று வெளியாகிய இப்படம்  வசூலில் சாதனை படைத்துள்ளது . கலவையான விமர்சனங்கள் இப்படம் வசூலில் கோட்டை விட வில்லை என்பதே உண்மை.

விவேகம் வசூல் நிலவரம்:

முதல் நாள்: ரூ.10 கோடி;  2ம் நாள்: ரூ. 15 கோடியும் வசூலானதாக கூறப்படுகிறது. ஞாயிறு வரையிலான இந்த நான்கு நாட்களில் ரூ.60 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.