நடிகர் அஜித் நடித்து  கடந்த 24ம் தேதி வெளியான விவேகம் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த படம் வெளியானவுடன் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஏராளமான அஜித் ரசிகர்களே இப்படம் பற்றி எதிர்மறையாக விமர்சித்தனர். ஆனால், பாக்ஸ் ஆபிசில் தற்போது வரை இந்த படம் ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  அஜித், விஜய்யை அடுத்து லாரன்சுக்கு ஜோடி சேரும் காஜல் அகர்வால்

வெளியான நான்கு நாட்களில் இப்படம் மொத்தம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சென்னையில் மட்டும் இப்படம் ரூ.6.2 கோடி வசூல் செய்துள்ளது.

பாகுபலி-2 முதல் வேறு எந்த படமும் குறைந்த நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வார வெள்ளிக்கிழமை சில புதிய படங்கள் வெளியாகவுள்ளன. அப்போதும் விவேகம் வசூலில் தாக்குபிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க பாஸ்-  உலகில் முதல்முறையாக 5 அடி உயரத்தில் அஜித் படம் போட்ட காலண்டர்