தலயுடன் மோதும் பப்ளிக் ஸ்டார் யார் தெரியுமா?

அஜித்,காஜல் அகர்வால் நடித்து வருகிற 24ம் தேதி வெளியாக உள்ளது விவேகம். சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

விவேகம் படம் ரிலீஸ் தேதி அறிவித்தவுடன் பல படங்கள் பின் வாங்கின. ஓரளவிற்கு மார்க்கெட் உள்ள நடிகர்கள் கூட நமக்கு எதற்கு இந்த சோதனை என்று ஜகா வாங்கியுள்ளனர். இதனால் விவேகம் தனிக்காட்டு ராஜாவாக வெளியாக உள்ளது. ஆனால் இந்த கோதாவில் புதிதாக ஒருவரும் குதித்துள்ளார். அவர்தான் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்துடன் வழக்கறிஞர் துரை சுதாகர். இவர் நடித்த தப்பாட்டம் திரைப்படம் வருகிற 24ம் தேதி அன்றுதான் வெளியாகிறது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா கூறுகையில், நாங்கள் ரிலீஸ் தேதியை பல நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். ஆனாலும் அஜித் படத்துடன் ரிலீஸ் ஆவதை பெருமையாக கருதுகிறோம் என்று கூறினார்.