விவேகம் படத்தின் அஜீத் பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறாா். ஏற்கனவே அஜித் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகி பட்டைய கிளம்பியது. தற்போது மீண்டும் விவேகம் படத்தில் அவா் பேசும் மற்றொரு பஞ்ச் டயலாக் வெளியாகி உள்ளது.

விவேகம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகா்வால் நடித்துள்ளாா். மேலும் இதில் அக்ஷரா ஹாசன், விவேக் ஒபராய் ஆகியயோரும் நடித்துள்ளனா். விவேகம் அடுத்த மாதம் வெளியாவதாக அறிவிப்புகள் வெளிவந்தன.  இந்த படத்திற்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறாா். இதை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சாா்பில் டி.ஜி. தியாகராஜன் தயாாித்துள்ளாா்.

முதலில் வெளியான பன்ச் டயலாக்குகளில் ஒன்றான நெவா் எவா் கிவ் அப் ரசிகா் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் விவேகம் படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பன்ச் டயலாக்கும் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் எண்ணம்போல்  வாழ்க்கை என்ற டயலாக் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குநா் சிவா, நான் எந்த டயலாக் எழுதினாலும், அதை அவா் ஸ்டைலில் பேசி  ஈஸியாக ரசிகா்கள் மத்தியில் ரிச் செய்துவிடுவாா் என்கிறாா்.