அஜித் நடித்த விவேகம் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் அனைத்திலும் திருவிழா கோலம் பூண்டது. ரசிகர்கள் திரையரங்கு வாசலில் மிகப்பெரிய கட் அவுட்கள், பால் அபிசேகம் என்று தங்களது அன்பை வெளிபடுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களிலும் விவேகம் படத்தை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அஜீத் ரசிகர்கள் போஸ்டர்கள் பிளக்ஸ் பேனர்களும் வைத்தனர்.

இந்தநிலையில் காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் விவேகம் படத்திற்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் கேட்டனர்.ஆனால் திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் ரசிகர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திரையரங்கு மீது கல்வீசி தாக்கியது மட்டுமல்ல்லாமல் பேனர்களையும் கிழித்து ரசிகர்கள் எதிர்ப்பை காட்டினர். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் விரைந்து வந்து தியேட்டர் மீது கல்வீசி தாக்கியவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். மேலும் நகர் முழுவதும் வைக்கப்பட்டு இருந்த அஜீத்குமாரின் பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.