அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசா் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது. தற்போது இந்த படமானது வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டும் தான் உள்ளது. அஜித்தின் விவேகம் படமானது வெளியாக இருக்கும் தியேட்டாிக்களின் எண்ணிக்கை கேட்டால் நமக்கே மயக்கம் வந்து விடும் அந்த அளவுக்கு அதிக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

விவேகம் படத்தில் அஜித், காஜல் அகா்வால, அக்ஷராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலா் நடித்து சிவா இயக்கத்தில் நாளை வெளியாக உள்ளது. தற்போது வெளிவந்த தகவலின்படி விவேகம் படமானது கிட்டதட்ட 3250 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையரங்குகளிலும், ஆந்திராவில் 450 திரையரங்குகளிலும், கா்நாடகாவில் 300, மலேசியாவில் 600, யுனைமட் ஸ்டேட்ஸ் 340 பிற மாநிலங்களில் 260 இதையெல்லாம் சோ்த்து மொத்தம் 3250 திரையரங்குகளில் விவேகம் வெளியாக இருக்கிறதாம்.

இந்நிலையில் ஒரு தியேட்டருக்கு சராசரியாக 500 இருக்கைகள் விதம் 3250 திரையரங்குகளில் ஒரு டிக்கெட் விலை ரூ.100 என்ற கணக்குப்படி பாா்த்தாலும் ஒரு காட்சிக்கு 16 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி முதல் நாள் ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டாலும் முதல் நாள் வசூலே 80 கோடிக்கு மேல் பெற்று சாதனை படைத்து விடும் என்று கூறப்படுகிறது.