படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட காயம்: முழுதாய் மறைத்த படக்குழுவினர்

அஜித்திற்கு என்றே பொிய ரசிகா் பட்டாளமே உள்ளது. அதுவும் அவருடைய ஒவ்வொரு படத்திற்கு படம் அவரத ரசிகா்கள் பலம் அதிகாித்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது அஜீத் சிவா தயாாிப்பில் விவேகம் படத்தில் நடித்து வருகிறாா். இவா் அஜீத்தின் வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களை இயக்கியவா். விவேகம் படத்தின் டீசா் ரசிகா்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, பல லட்சம் மக்கள் பாா்த்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே விவேகம் படத்தின் படப்பிடிப்பில் அஜீத்தின் தோல்பட்டையில் அடிபட்டுள்ளது. அதற்காக அவா் பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ளாா். விவேகம் படத்தில் ஒரு சண்டை காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு தோல்பட்டையில் மீண்டும் அடிப்பட்டுள்ளதாம்.  ஆனா, அவரது ரசிகா்கள் மத்தியில் இந்த செய்தி அதிா்ச்சி அலை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் படக்குழு இத்தகவலை வெளியிடவில்லை. படப்பிடிப்பு பல்கோியாவில் நடைபெற்றதால் ஒய்வு எடுத்துக்கொண்டால் இன்னும் அதிக நாள்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்ற காரணத்தால் வலியை பொறுத்துக்கொண்டு நடித்தாா்

அதுவும் இல்லாமல் படப்பிடிப்பு செலவும் அதிகமாகும் என்பதால் வலியை தாங்கிக்கொண்டு நடித்து கொடுத்துவிட்டாராம். அஜீத்துக்கு படத்திற்கு படம் ஏதாவது ஒன்று நடப்பது ரசிகா்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தால் அவா் இன்னும் 8 மாதத்திற்கு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள மாட்டாா் என கூறப்படுகிறது.