ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை மற்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடிக்க பல நடிகர்கள் முயன்று வரும் நிலையில் யூடியூப் லைக்குகளில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து அஜித் சாதனை செய்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  மருத்துவமனையில் திடீா் அனுமதி! அஜித்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை

சமீபத்தில் வெளியான தல அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசர் ஏற்கனவே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது 4 லட்சம் லைக்குகளுக்கும் அதிகமாக பெற்று சாதனை செய்துள்ளது.

இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்ற ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையை ரஜினியின் ‘கபாலி’ மட்டுமே பெற்றிருந்த நிலையில் தற்போது ‘கபாலி’க்கு அடுத்த இடத்தை விவேகம் பெற்று சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.