Home சற்றுமுன் விவேகம் டிரெய்லர் ரெடி ; அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

விவேகம் டிரெய்லர் ரெடி ; அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அஜீத்தின் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் டிரெய்லர் வீடியோ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அஜீத் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் விவேகம். இயக்குனர் சிவா தொடர்ச்சியாக அஜீத்தை வைத்து இயக்கும் மூன்றாவது படம் இது. இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தில் இடம்பெற்ற,  அஜீத்தின் அசத்தலான புகைப்படங்கள், பாடல்கள் என படக்குழு ஓவ்வொன்றாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது. விரைவில் இப்படம் வெளியாவதால், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகாமல் போய்விடுமோ என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது.

இந்நிலையில்தான் இப்படத்தின் எடிட்டர் ரூபன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், விவேகம் படத்தின் ட்ரெய்லர் ரெடியாக இருக்கிறது. எப்போது வெளியாகும் என இயக்குனர் சிவா அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.எனவே, இப்படத்தின் டிரெய்லர் வீடியோ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த செய்தி அஜீத் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.