அஜீத் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.

இப்படம் வெளிநாடுகளில் நேற்றே வெளியாகியிவிட்டது. தமிழகத்தின் பல தியேட்டர்கள் இந்த படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் டிக்கெட்டை வாங்க அஜித் ரசிகர்கள் முயன்று வருகிறார்கள். சில தியேட்டர்கள் ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை.

புதுச்சேரியில் டிக்கெட் கிடைக்காத சில அஜீத் ரசிகர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விவேகம் பட பேனரை கிழித்த சம்பவமும் இன்று காலை நடந்தது.

இந்நிலையில் இப்படத்தின் விமர்சனம் இன்று காலையிலேயே பல ஊடகங்களில் வெளியாகிவிட்டது. இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் அஜீத் நடித்துள்ளார். அனைத்து காட்சிகளிலும் அஜீத் அழகாக இருக்கிறார் எனவும், பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கிறது எனவும், படத்தில் காட்டப்படும் இடங்கள் அழகாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது என பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், ஏறக்குறைய இப்படம் ஒரு ஆங்கில படம் போல் எடுக்கப்பட்டிருகிறது. படத்தில் நிறைய காட்சிகளில் ஆங்கில வசனங்கள் இடம் பெற்றுள்ளனர். கதைக்களமும், கதை சொல்லப்பட்டிருக்கும் விதமும்  சிட்டி ரசிர்கள் அதாவது நன்கு படித்தவர்கள் வசிக்கு ஏ செண்டர் ரசிர்களுக்கு மட்டுமே புரியும் எனவும்,  பி,சி செண்டர் எனப்படும் கிராம, சிறிய நகரங்களில் படம் பார்ப்பவர்களு இப்படம் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

அதிலும் படத்தில் காட்டப்படும் சில காட்சிகள் ஏ செண்டர் ரசிகர்களுக்கே புரியாது என சிலர் கூறி வருகிறார்கள். வழக்காமாக தமிழ் சினிமாக்களில் காணப்படும் மசாலாக்கள் இல்லாமல் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதால் இப்படம் பி,சி செண்டர்கள் ரசிகர்கள் எந்த அளவிற்கு கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….