பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வசூலை பெற்ற படம். அமீர்கானின் டங்கலை அடுத்து உலக அளவில் மிக அதிக வசூலை செய்து சாதனை செய்திருந்தாலும் இந்த படத்தின் இரண்டு நாள் வசூலை அஜித்தின் விவேகம் முறியடித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாகுபலி 2 படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் ரூ.65 கோடி ஆகும். இந்த வசூல் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் தொகை மட்டுமே. இந்த நிலையில் அஜித்தின் ‘விவேகம்’ அதே தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் இரண்டு நாட்களில் ரூ.66 கோடி வசூல் செய்துள்ளது. எனவே பாகுபலி 2′ சாதனையை ரூ.1 கோடி வித்தியாசத்தில் விவேகம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பை சேர்த்தால் விவேகம் படத்தின் வசூல் பக்கத்தில் கூட வரமுடியாது. ஏனெனில் ‘பாகுபலி 2’ படத்தின் மூன்று மொழி பதிப்புகளின் மொத்த இரண்டு நாள் வசூல் ரூ.80 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவேகம் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துவிட்டதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இந்த அளவுக்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனத்திலும் ‘விவேகம்’ படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.