ரூ.100 கோடி பட்ஜெட்டை தாண்டியது அஜித்தின் ‘விவேகம்’

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கோல்ட் மைன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் 70% வெளிநாட்டில் படமாக்கப்பட்டதால் பட்ஜெட் எகிறிவிட்டதாகவும் இருப்பினும் இந்த படம் மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நல்ல வசூலை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் தமிழக உரிமையை பெற நான்கு முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும், அனேகமாக ‘கபாலி’ படத்தை அடுத்து அதிக விலைக்கு விலைபோகும் படம் ‘விவேகம்’ படமாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.