டீசர் ரிலீசுக்கு பின்னர் உச்சத்தை தொட்ட ‘விவேகம்’ வியாபாரம்

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அனேகமாக வரும் திங்கள் அன்று அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 12.01 மணிக்கு கிளம்பிய ‘விவேகம்’ டீசர் புயல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. லைக்ஸ்களும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் நிமிடத்திற்கு நிமிடம் யூடியூபில் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

டீசருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, இந்த படத்தின் வியாபாரத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரூ.55 கோடிக்கு ஒரு பெரிய நிறுவனம் பேசி வருவதாகவும், இந்த தொகை ரஜினி படத்தின் தொகையை அடுத்து பெரிய தொகை என்றும் கூறப்படுகிறது.

ரூ.100 கோடிக்கும் மேல் பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் ரூ.200கோடியை முதல் வாரமே தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.