அஜித்தை கடைசியில் தள்ளிய சிறுத்தை சிவா? காரணம் என்ன?

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘விவேகம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது உறுதி ஆகிவிட்டது என்பதால் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. ஆனால் ‘விவேகம்’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதால் அவர் கடைசியில்தான் டப்பிங் செய்வார் என்றும் அவருக்கு முன்னர் இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகையர் டப்பிங் செய்வார்கள் என்றும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.