சென்னை காசி, அபிராமி தியேட்டர்களில் விவேகம் சாதனை

07:28 மணி

தல அஜித்தின் விவேகம்’ திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான முன்பதிவுகள் மின்னல் வேகத்தில் முடிவடைந்துவிட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நான்கு நாள் காட்சிக்குரிய டிக்கெட்டுக்களும் விற்றுவிட்டதாக தெரியவந்துள்ளது

குறிப்பாக அஜித்தின் சென்னை கோட்டை என்று கூறப்படும் தியேட்டர் காசி தியேட்டர். இந்த தியேட்டரின் முகப்பே தெரியாத அளவுக்கு அஜித்தின் கட்-அவுட்டுகள் உள்ளது. மேலும் இந்த திரையரங்கில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்களுக்குரிய அனைத்து காட்சிகளின் டிக்கெட்டுக்கள் வெறும் இரண்டரை மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிட்டதாம்

அதேபோல் நகரின் இன்னொரு முக்கிய திரையரங்க வளாகமான அபிராமி மால் திரையரங்கில் ஒரே இரவில் 15000 டிக்கெட்டுக்கள் விற்பனையாகிவிட்டதாகவும், தனது இத்தனை வருட தியேட்டர் அனுபவத்தில் இவ்வளவு வேகமாக இந்த எண்ணிக்கையில் டிக்கெட்டுக்கள் விற்பனையை தான் பார்த்ததில்லை என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393