சென்னையில் 4 நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிய ‘விவேகம்

10:32 காலை

இதுவரை இல்லாத அளவில் விவேகம் படத்திற்கு மிக அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. அஜித்தை பிடிக்காத ஊடகங்கள், விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் இந்த படத்தை நெகட்டிவ் விமர்சனம் செய்ய பல லட்சங்கள் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

Loading...

இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி ‘விவேகம்’ படத்தின் வசூல் புதிய சாதனை செய்துள்ளது. இந்த படம் சென்னையில் மட்டும் 4 நாட்களில் ரூ.6 கோடியை நெருங்கியுள்ளது. அதாவது ரூ.5,67,32,498 வசூல் செய்துள்ளது.

மேலும் திரையிடப்பட்ட 889 காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்து இந்த படத்தின் வெற்றி உறுதிசெய்யப்படும் என விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 57 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393