விவேகம்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ். படக்குழுவினர் மகிழ்ச்சி

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்தனர்.

படத்தை சற்றுமுன் பார்த்து முடித்த சென்சார் அதிகாரிகள் எந்த கட் இல்லாமல் படத்தை அனுமதித்ததோடு, படத்திற்கு ‘U’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது., மேலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நள்ளிரவு காட்சியும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதிகாலை காட்சியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.