தல அஜித்தின் விவேகம் திரைப்படத்தின் முன்பதிவு ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. கோலிவுட் திரையுலகில் ஒரு படம் ரூ.100 கோடி வசூல் செய்வதே அரிதான காட்சியாக இருக்கும் நிலையில் ‘விவேகம்’ திரைப்படம் முன்பதிவின் மூலம் மட்டும் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இந்த படத்தின் முதல் வார வசூல் சுமார் ரூ.400 கோடியை தொடும் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் கோலிவுட் திரையுலகினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் வசூல் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இந்த படத்திற்கு பின்னர் அஜித்தின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உலக அளவில் இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து ஆங்கிலம், ஜப்பான், மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்யும் முயற்சிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது