தல அஜித்தின் விவேகம் படத்தை ஏராளமான பெய்டு விமர்சகர்கள் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நடுநிலை பார்வையாளர்களே களத்தில் இறங்கிவிட்டனர். இந்த படத்தில் உள்ள முக்கிய விஷயங்கள் குறித்து வீடியோவில் பேசி டுவிட்டர், பேஸ்புக்கில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் தமிழ் படவுலகிற்கு ‘விவேகம்’ படம் ஒரு புதுமை. இதுவரை யாருமே ஹாலோகிராம், சீக்ரைட் சொசைட்டி, மார்ஸ் கோட் ஆகியவை குறித்து பேசியதே இல்லை. துப்பாக்கி படத்திற்கு பின்னர்தான் நமக்கு ஸ்லீப்பர் செல் என்றால் என்ன என்பது தெரியவந்தது. அதே போல் இந்த படத்திலும் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உள்ளது ‘என்று கூறியுள்ளார்.