தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்பட பலர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே,. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கவுள்ளது. .

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விவேகம் திரைப்படம் 167 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடுகிறது என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்ற செய்தி பிரபல ஊடகங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் ‘விவேகம்’ திரைப்படம் நிச்சயம் ஓப்பனிங் வசூலில் இதுவரை இல்லாத சாதனையை ஏற்படுத்தும் என்று விநியோகிஸ்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.