மறுபடியும் பெல்ஜியமா? அஜித் பட தயாரிப்பாளர் அதிர்ச்சி

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக மீண்டும் ‘விவேகம்’ படக்குழு பெல்ஜியம் மற்றும் செர்பியா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை கடந்த முறை படமாக்க முடியவில்லை என்றும் இதனால் இந்த ஒரே ஒரு காட்சிக்காக மீண்டும் பெல்ஜியம் மற்றும் செர்பியா செல்ல வேண்டும் என இயக்குனர் பிடிவாதம் செய்யவே வேறு வழியில்லாமல் தயாரிப்பு நிறுவனம் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு படக்குழுவினர் செல்லவுள்ளதால் ‘விவேகம்’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? அல்லது காலதாமதம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்