வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை மாற்றிய விவேகம் படக்குழு

அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள ‘விவேகம்’ படம் வரும் 24ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் முதல் டீசர் வரை அனைத்து விஷயங்களும் வியாழக்கிழமைதான் நடந்துள்ளது. அஜித் மற்றும் சிவா இருவருமே சாய்பாபா பக்தர்கள் என்பதால் இந்த செண்டிமெண்ட் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘விவேகம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 7ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் அனைத்து விஷயங்களும் வியாழக்கிழமையே நடந்து கொண்டிருந்த நிலையில் இசை வெளியீடு மட்டும் திங்கட்கிழமை ஏன் வெளியாகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை
இந்த நிலையில் நேற்று இரவு அதாவது வியாழக்கிழமை இந்த படத்தின் முன்னோட்ட பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களின் ஒருசில வரிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.