நகைச்சுவை நடிகர் விவேக் அவ்வப்போது தனது சமூக கருத்துக்களை வெளியிட்டு வருவரு வாடிக்கை. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு அவா் குழந்தைகளுக்கு இந்த கோடை விடுமுறையை எப்படி போக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் விவேக்கை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

கோடை விடுமுறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டுள்ளது. அதனால் நடிகர் விவேக் கோடை விடுமுறைகை எப்படி கழிக்க வேண்டும் என தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அன்புள்ள மாணவர்கள் மற்றும் குழந்தைகள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழியுங்கள், விளையாடிய பிறகு நிறைய தண்ணீர் குடியுங்கள் என்றும், பெண் பிள்ளைகள் சமையில் அறையில் தாயக்கு உதவியாகவும்,ஆண் பிள்ளைகள் தந்தை வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவர் எப்படி குடும்பத்திற்காக உழைக்கிறார் என்று பாருங்கள், அப்போது தான் உறவு மேம்படும் என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த விவேக்கின் கருத்துக்கு பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பிள்ளைகள் பற்றிய இந்த ட்வீட் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது. பெண் பிள்ளைகள் என்றால் சமையல் அறையில்தான் இருக்க வேண்டுமா, நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று சிலர் விவேக்கின் ட்வீட்டை பார்த்து கேள்வி கேட்டு வருகின்றனர். இப்படி நீங்கள் ஆண், பெண் பிள்ளைகைளை பிரித்து பார்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அது என்ன பெண் பிள்ளைகள் என்றால் சமையல் அறைக்கு தான் செல்ல வேண்டுமா என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் நீங்கள் பழைய பஞ்சாங்கமா இருக்காதீங்க என்றும் சிலர் கேட்டுள்ளனர். சினிமாவில் மட்டும் தான் பகுத்தறிவு, பெண் உரிமை பத்தி போதித்தா போதாது. வாழ்ந்து காட்டனும் என்று குறிப்பிட்டு விவேக்கை கடுமையாக விளாசித்துள்ளனர்.