நடிகர் விவேக் தனது கலாம் பவுண்டேஷன் மூலமாக நிறைய மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வருகிறார். நிறைய கல்லூரிகள் பள்ளிகளில் மரம் நடுதல் வழியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

நேற்று திருவண்ணாமலையில் இது போல மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது முன்னாள் திமுக அமைச்சர் எ.வ வேலு முன்னிலை வகித்தார்.

இது குறித்த விளம்பரத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த விவேக்கிடம் ஒரு ரசிகர் நீங்க இவ்வளவு மரம் வச்சேன்னு சொல்றிங்க நீங்க அவ்வளவு லட்சம் மரம் வச்சிருந்தா தமிழ்நாடே காடு மாதிரி இருந்திருக்குமே என்று சொல்கிறார்.

இதற்கு விவேக் பதிலளிக்கையில் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் ஆமா சார் எத்தனை மரம் நட்டீர்கள் என திரும்ப நக்கலாக கேட்டுள்ளார்.