பெரும்பாலும் அனைத்து குற்றங்களையும் காண்பித்து கொடுக்கும் ஒரு முக்கிய கருவியாக சிசிடிவி கேமரா விளங்குகிறது. மிகப்பெரிய கொள்ளை ,கொலை சம்பவங்களில் கூட இது காவல்துறைக்கு எளிதில் துப்பு துலக்க உதவுகிறது.

காவல்துறைக்கு உதவும் விதமாக அனைத்து பொது இடங்களிலும் வீடுகளிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஊட்டுவதற்காக விவேக்,செல் முருகன் இணைந்து ஒரு சின்ன குறும்படத்தில் நடித்துள்ளனர் அதை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார் விவேக்.