5 டிகிரி குளிரில் வெற்றுடம்புடன் அஜித்: விவேக் ஓபராய் ஆச்சரியம்

அஜித் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் மிகுந்த சிரத்தை எடுத்து நடிப்பவர் என்பதும் பல காட்சிகளுக்கு டூப் போடாமல் நடிப்பவர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ‘விவேகம்’ படத்தின் வில்லன் நடிகர் விவேக் ஓபராய், ‘பல்கேரியாவில் கடுமையான குளிர் வாட்டி எடுக்கும். ஒருநாள் மைனஸ் 5 டிகிரி இருக்கும்போது படப்பிடிப்பு நடந்தது. அப்போது இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்பட அனைவரும் பல சட்டைகள் போட்டும் குளிரில் நடுங்கி கொண்டிருந்தோம்.

ஆனால் அஜித், அன்றைய படப்பிடிப்பில் சட்டையே போடாமல் வெற்றுடம்புடன் சில காட்சிகளில் நடித்தார். அதை பார்த்தவுடன் எனக்கு புல்லரித்துவிட்டது. இப்படி ஒரு தொழில்பக்தியுடன் கூடிய நடிகரா? என்று வியந்தேன்’ என்று கூறினார்.