சத்யராஜ் , கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்று ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் நாயகன் புதுமுக நடிகர்விவேக் ராஜ்கோபால் கூறியிருக்கிறார்.

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன் KM இயக்கத்தில்அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டு பெற்ற படம் ‘எச்சரிக்கை `, இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும் மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பார்கள். விவேக் ஓர் அறிமுக நடிகராக இருந்தாலும் ,அனுபவ நடிகரான கிஷோருடன் ஈடு கொடுத்து நடித்திருப்பார்.

இது குறித்து விவேக் ராஜ்கோபால் கூறுகையில்,

” நான் சென்னைதான். ரஜினி சாரின் ஆஸ்ரம் ஸ்கூலில் படித்தேன். கல்லூரிப் படிப்பு லயோலாவில் போனது . சினிமா ஆசை விடாமல் என்னைத் துரத்தியது, . கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன், எனக்கும் பயிற்சி அளித்தவர் ` ஜோக்கர் ` பட நாயகன் சோமசுந்தரம் .

நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன் . இந்தப் படம் `எச்சரிக்கை` உருவாக இருப்பது அறிந்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன் . அவர் சொன்னார் நாயகனாக பிரபலமான நடிகரை ஒப்பந்தம் செய்வோம் இல்லா விட்டால் புது முகம்தான் என்றார், ஏற்கெனவே பலரையும் ஆடிசன் மூலம் பார்த்து நாலு பேரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். ஆனாலும் நான் விடவில்லை. விடாமல் துரத்தினேன். ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு ஆச்சரியம் , மகிழ்ச்சி , தன்னம்பிக்கை எல்லாம் வந்தது .ஏனென்றால் உடன் நடிப்பவர்கள் சத்யராஜ் , சிஷோர் , வரலட்சுமி என்று ஏற்கனவே பிரபலமானவர்கள் இருக்கும் போது இயக்குநர் நான் ஏற்ற தாமஸ் பாத்திரத்துக்கு பிரபலமான ஒரு நடிகரைக் கூட நடிக்க வைத்திருக்க முடியும், இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எனக்கு எப்படியும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது என்றார்.

சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும். அவர் பெரிய நடிகர் அனுபவசாலி . `பாகுபலி `படம் எல்லாம் வந்து அவரை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருந்தது. அவர் எப்படி நடந்து கொள்வாரோ என்று தயக்கம் , பயம் எனக்குள் இருந்தது, ஆனால் அவர் முதல் சந்திப்பிலேயே சகஜமாகிப்பேசிப்பழகி என்னை ஆச்சரியப்பட வைத்தார் . நான் நடித்ததைப் பார்த்து பரவாயில்லையே பையன் நல்லா பண்றானேன்னு இயக்குநரிடம் கூறினார். பிறகு படம் பற்றிப் அவர்பேசும் போது எல்லாம் கூட என்னையும் பற்றிக் பேசுவார். அவர் பெருந்தன்மை ஆச்சரியப்பட வைத்தது. அதே போல கிஷோர் சாரும். அவர் எவ்வளவு நல்ல நல்ல பாத்திரங்களில் நடிப்பவர், `ரிச்சி` படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் எனக்குப் பிடிக்கும். அவருடன் நான் இணைந்து நடிப்பது படம் முழுக்கப் பயணம் செய்வது என்பது எவ்வளவு பெரிய வாய்ப் பு . அவர் அருகில் நான் இருக்கும் போது எனக்குப் பலம் கிடைத்த உணர் வு ஏற்பட்டது.. அவரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன். நான் நடிக்கவும் இடம் தந்து ஊக்கப் படுத்தினார்.. வாழ்த்துகள்.

Loading...