Actor Vivek TikTok video – நடிகர் விவேக் அவரின் திரைப்பட வசனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிக்டாக் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

திரைப்படங்களில் இடம் பெற்ற வசனங்களை ரசிகர்கள் தங்கள் முகபாவனையுடன் பேசிக்காட்டி உருவாக்கப்படும் டிக்டாக் வீடியோவை பலரும் பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் அது கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பெண்களே ஆபாசமாக பேசுவதும், ஆபாசமாக உடையணிந்து பேசுவதும் கடும் சர்ச்சைக்கு ஆளானது. எனவே, டிக்டாக் வீடியோவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தடை விதிக்க முடியாது எனக்கூறிவிட்டது.

இந்நிலையில், விக்ரம் நடித்த சாமி படத்தில் விவேக் பேசும் வசனத்தை, ஒரு நாயை வைத்து ஒரு வாலிபர் டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விவேக் ‘அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.