எம்ஜிஆா் சிலையை நேற்று ரஜினிகாந்த் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சை கேட்டு அனைத்து தரப்பு மக்களை வெகுவாக ஈா்ந்துள்ளது. இதுவரை பேசாத ரஜினியா என்று அனைவரையும் வாயடைக்க வைத்து விட்டார்.அந்த அளவுக்கு அவரது பேச்சு அமைந்து இருந்தது. இந்நிலையில் நடிகா் விவேக் ரஜினியின் பேச்சு பற்றி பாராட்டி உள்ளார்.

எம்ஜிஆா் கல்வி மற்றும் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்த வைத்தார் ரஜினி. ரஜினி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த பின் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. எம்ஜிஆா் கல்லூரியின் 30வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி மாணவா்கள் அவா்களுக்குள் ஆங்கிலத்தில் பேச வேண்டும். பல்வேறு இடங்களில் வேலைக்கு சென்று தமிழகா்கள் என்ற நிலையை நாட்ட வேண்டும் என்றும், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவா் ஆளுமை திறமை மிக்கவா்கள். எம்ஜிஆா் போல என்னால் வரமுடியாது. அவரை போல ஆட்சியை அமைக்க முடியும் என்றும் பேசினார்.

இந்நிலையில் நடிகா் விவேக் ரஜினி பேச்சு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி பேச்சிய பேச்சு அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவா்ந்துள்ளது. அவா் மிகவும் வெளிப்படையாகவும், உண்மையாகவும் பேசியிருந்தார். இருந்த போதிலும், அதிமுக,திமுக என்னும் இருபெரும் இமயங்கள் எதிரில். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்! இவ்வாறு தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.