மருத்துவ முத்தம் முக்கியமல்ல;மருத்துவ யுத்தமே முக்கியம்- பிரபல பாடகர் கருத்து

 

நீட் விவகாரத்தால் தற்போது தமிழகத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆழ்ந்த துயரத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நீட் தோ்வுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது தோல்வியை தழுவியதால் தனது மருத்துவா் கனவு பலிக்காமல் போன காரணத்தால் மனஉடைந்து தற்கொலை செய்து கொண்டாா். அனிதாவின் பேரிழப்பு ஒட்டு மொத்த உலகத்தை சோகத்தில் தள்ளியிருக்கிறது.

பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து வருத்தத்தை பதிவு செய்து வரும் நிலையில், பிரபல பாடலாசிாியா் விவேகா தனது ட்விட்டா் வலைத்தளத்தில் மருத்துவ முத்தம் இருக்கட்டும். தற்போது நடந்து வரும் மருத்துவ யுத்தத்ததை கவனிப்போம் என பதிவு செய்துள்ளாா்.