Home சற்றுமுன் இயக்குனரை போடா என்று டுவீட் செய்த டிடி

இயக்குனரை போடா என்று டுவீட் செய்த டிடி

இயக்குனர் நெல்சன், நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லும் வரும் மார்ச் 5ஆம் தேதியும், ஃபர்ஸ்ட்சிங்கிள் வரும் மார்ச் 8ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த செய்தியை கேட்ட தொலைக்காட்சி பிரபலம் டிடி, தனது டுவிட்டில் இயக்குனர் நெல்சனை ‘போடா’ என்று அன்புடன் அழைத்து, இந்த தகவலால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன், நீ இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவாய்’ என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

இயக்குனர் நெல்சன், விஜய்டிவியில் பணிபுரிந்தவர் என்பதால் டிடிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்தான் ‘சிம்பு’ நடித்து வந்த ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை ஆரம்பித்து பின்னர் பாதியில் கைவிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.