சினிமாவை காப்பற்றவே இந்த முடிவு – விஷால் பேட்டி

சரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால்

தமிழ் சினிமாவை காப்பற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் குறித்து பல்வேறு புகார்களை கூறி வந்த நடிகர் விஷால், விரைவில் நடக்கவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், ஒரு அணி அமைத்து போட்டியிட உள்ளனர். இந்நிலையில், அதற்காக ஆதரவு திரட்டுவதற்காக விஷால் தனது அணியுடன் கோவை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:

கடந்த 10 வருடங்களாக சினிமா துறையில் எதுவுமே நடக்கவில்லை. பல படங்களை வெளியிட முடியவில்லை. சில படங்களுக்கு திரையரங்குகளே கிடைப்பதில்லை. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, சினிமாவை காப்பாற்றவே நாங்கள் ஒரு அணி அமைத்து தேர்தலில் நிற்கிறோம்.

இந்த தேர்தலில் 100 சதவீதம் நாங்கள் வெற்றி பெறுவோம். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனை சந்தித்து, எங்களுக்கு ஆதரவு திரட்டுவோம்” என அவர் பேசினார்.

அவருடன் மிஷ்கின், எஸ்.ஆர். பிரபு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் உதயா, நந்தா ஆகியோரும் உடன் இருந்தனர்.