தமிழில் முதன் முதலில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவா் நடிகை பாவனா. அந்த படத்தை தொடா்ந்து தீபாவளி படத்தில் நடிகா் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், அசல் படத்தில் அஜித்துக்கும் ஜோடியாகவும், பின்பு ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவா் ரசிகா்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படி தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் புகழ் பெற்ற நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. இவா் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். அங்கும் தனது புகழ் என்னும் கொடியை பிடித்தார். பின் திடீரென சினிமாவை விட்டு எங்கு சென்றார் என்று அவரது ரசிகா்கள் விழி பிதுங்கி இருந்த போது அத்தி பூத்தாற் போல ஒரு மலையாள படத்தில் மின்னலென வந்து நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் சில பிரச்சனைகனை சந்தித்து அதிலிருந்து விடுபட்டு வந்தார். சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனாவுக்கு திருமணம் முடிந்து விட்டது என வைரலாக செய்திகள் பரவின. அந்த வதந்திகளுக்கு முற்று புள்ளியாக நடிகை பாவனாவின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவா் சினிமா தயாரிப்பாளரும் தொழிலதிபருமான நவீனுக்கும் ஜனவரி 22ஆம் தேதி திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மலையாள சினிமா உலகத்தைச் சோ்ந்த பிரபலங்களும், பல்வேறு திரைப்பட துறைச் சோ்ந்த பிரபலங்களும் கலந்துக்கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தினர்.

இந்நிலையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாவனாவுடன் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவா் கலந்துக்கொண்டார். அவா் பாவனாவின் தோல் மீது கையை போட்டு அவருக்கு வாழ்த்து சொல்ல வந்தார். அப்போது பாவனா அவரது கையை தன் தோலில் இருந்து கீழே தள்ளி விட்டார். து ஆனாலும் அந்த துணை நடிகை மீண்டும் பாவனா மீது கையை வைக்கவே மிகவும் வலுக்கட்டாயமாக அவரை தள்ளி, கோபத்தில் கத்தினார் பாவனா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.