நடிகை சமந்தா நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தின் டீசர் நேற்று வெளியானது., இந்த டீசரில் ஒருவரின் தலையை சமந்தா வெட்டுவது போன்ற காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

இதுவரை காதல் பதுமையாக மென்மையான கேரக்டர்களில் நடித்து வந்த சமந்தா, இந்த படத்தில் கொலைகாரியாக நடித்திருப்பதாகவும், அவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் படம் பார்ப்பவர்களுக்கு தெரியவரும்போது திடுக்கிடை வைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் இந்த படத்தின் நாயகன் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது