சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை இணையதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது. டீசர் லீக்காகி இத்தனை மணி நேரம் ஆகியும் ஷங்கர் மற்றும் ரஜினியிடம் இருந்து எந்தவொரு ரியாக்சனும் வெளியாகாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்த டீசரை இந்த படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் நண்பரும், ஐரோப்பாவின் வினியோகஸ்தருமான கரன்ஷான் என்பவர் தான் தனது டுவிட்டரில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

தனது நண்பர் சுபாஷ்கரனின் பிறந்த நாளை ஒட்டியே இந்த டீசரை கரன்ஷான் வெளியிட்டதாகவும் இதனால்தான் ஷங்கர் மெளனம் காப்பதாகவும் கூறப்படுகிறது