வரும் 21ஆம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள கமல்ஹாசன் இன்று திடீரென ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அவர் ரஜினியுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது

ஆனால் சந்திப்புக்கு பின்னர் ரஜினி இதை தனது பேட்டியின் மூலம் மறுத்துவிட்டார். சினிமாவில் கூட எனது பாணி வேறு, கமல் பாணி வேறு, அதேபோல் அரசியலிலும் இருவரது பாணிகளும் வெவ்வேறாக இருக்கும் என்று கூறியதன் மூலம் கமலுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துவிட்டார்

கமலுக்கு என்னதான் பெரிய மனிதர்களின் ஆதரவு இருந்தாலும், ரஜினி களத்தில் இறங்கினால் கமல் காணாமல் போய்விடுவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்