ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவேன் என சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. அவரின் ரசிகர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால் இன்னும் ரஜினிகாந்த் எவ்வித அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் இல்லாதது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி வேலை வாங்கினார் - ரஜினி பேட்டி

ரஜினி மக்கள் மன்றம் என அறிவிக்கப்பட்டு சில செயல்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கட்சி ஆரம்பிக்கும் முன்பே மன்ற நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள் சரியில்லை என ரஜினிகாந்தால் நீக்கமும் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் வாட்ஸப் குரூப் ரஜினியின் கட்சி விசயங்களுக்காக பல பெயர்களில் இயங்கி வருவதாகவும் அவை எல்லாம் ஒரே பெயரில் தான் இயங்க வேண்டும். ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரிலேயே இயங்க வேண்டும்  அந்த மாவட்ட உறுப்பினர்களை மட்டுமே நிர்வாகிகள் அந்த வாட்ஸப் குரூப்பில் சேர்க்க வேண்டும். வேறு மாவட்ட நிர்வாகிகளை சேர்க்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.