பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இடையே பல்வேறு விதமான கோபங்கள், சண்டைகள் இருந்து வந்தன. ஒரு சிலரது வெளியேற்றத்துக்கு பிறகே போட்டியாளர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை தட்டி கேட்க ஆரம்பித்தனர்.

       

        கடைசி இரு வாரங்களில் குறைவான போட்டியாளர்கள் இருந்தாலும் அவர்களின் அதிகப்படியான பாசம், ஒற்றுமை,விட்டுகொடுக்கும் தன்மை தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவை தேடி தந்தது.100 வது நாள் விழாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.அதில் வெற்றி பெற்ற ஆரவிற்க்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

 

         100 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து, இதில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் அனைவரும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துவரும் நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களை கௌரவிக்கும் விதத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக பல கோடி ரசிகர்களின் மனதைக்கவர்ந்த ஓவியா பங்கேற்றுள்ளார்.ஆனால் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது.