மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம்போல வணங்கப்பட்டு வருகிறது. தஙக்ள் ஆதர்ஸ கிரிக்கெட் வீரர்கள் கடவுளர்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து இந்தியாவில் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக மாற்றுதிறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்போது இந்தியாவில் இந்தியா, நேபால் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாற்றுதிறனாளி வீரர்கள் கலந்துகொள்ளும் முத்தரப்பு வீல் சேர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டிகள் நடந்து வந்தாலும் இந்த ஆண்டு அதிகளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூகவலைதளங்களில் இந்த வீல்சேர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் கண்பார்வையற்றவர்களுக்கான உலக அளவிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.